மகிந்தவிடம் கோத்தபாய பற்றி விசாரித்த அமெரிக்க தூதுவர்

பதவிக்காலம் முடிந்து இலங்கையில் இருந்து வெளியேறவுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷாப் அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. அமெரிக்க தூதுவர் இந்த சந்திப்பின் போது கோத்தபாய ராஜபக்ச குறித்தும் விசாரித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பிரபலமற்ற நபரா என அமெரிக்க தூதுவர், முன்னாள் ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார். அத்துடன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மீது மக்கள் அச்சம் கொண்டுள்ளனரா எனவும் அவர் கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள முன்னாள் ஜனாதிபதி, மக்கள் மத்தியில் அப்படியான அச்சம் எதுவுமில்லை என கூறியுள்ளதுடன், ஏன் அப்படியான கேள்வியை கேட்டீர்கள் எனவும் வினவியுள்ளார்.

பதவிக்காலம் முடிந்து செல்ல உள்ள அமெரிக்க தூதுவர் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்