இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதை தெட்டாலும் பொன்னாக மாறுமாம்! இதில் உங்க ராசி இருக்கா?

எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இன்று லாபகரமான நாளாகவும் அமையும் என்பது குறித்து பார்ப்போம்.
மேஷம்

வீட்டில் குழந்தைகளுக்கு எது தேவையோ அதை நிவர்த்தி செய்து வைப்பீர்கள். குடும்ப பரம்பரை சொத்துக்களில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். புதிதாக உருவான நட்பு வட்டத்தின் மூலம் போதிய அனுகூலங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கும் அதிர்ஷ்ட எண்ணாக 2 ம் அதிர்ஷ்ட நிறமாக இளம்மஞ்சளும் இருக்கும்.
கடகம்

வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் போதிய அளவு முன்னேற்றம் ஏற்படும். விவசாயம் சம்பந்தப்பட்ட பணிகளில் மேன்மையான சூழல்கள் உண்டாகும். எந்த வேலையாக இருந்தாலும் மிக வேகமாக செய்து முடிப்பீர்கள். உயர் பதவியில் இருப்பவர்கள் தன்னுடன் பணிபுரியும் மற்ற ஊழியர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாகச் செயல்படுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 1 ஆகவும் அதிர்ஷ்ட திசை தென்கிழக்காகவும் அதிர்ஷ்ட நிறம் அடர் மஞ்சளாகவும் இருக்கும்.
சிம்மம்

வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய சூழல் உண்டாகும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட, தாமதமாகிக் கொண்டே போன பணிகள் உங்களுக்கு சாதகமாகவே முடியும். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் மூலம் ஆதாயங்கள் உண்டாகும். உடல் நலனில் முன்னேற்றம் ஏற்படும். பயணங்கள் மகிழ்ச்சியையும் மன நிம்மதியையும் தரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக 9 ம் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சளும் இருக்கும்.
துலாம்

மனதுக்குள் இதுவரை இருந்து வந்த கவலைகள் தீரும். உங்களுடைய எண்ணங்களில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். உணவு அலர்ஜி ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சாப்பிடும் உணவில் கொஞ்சம் கவனமாக இருங்கள். அரசங்கத்திடம் இருந்து நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த பணிகளில் உஙடகளுக்கு சதகமான பலன்கள் கிடைக்கும். வேலை இடமாற்றம் அல்லது பதவி உயர்வுக்கான சூழல் உண்டாகும். வருமானம் பெருகும். இன்று உங்களுக்கு கிழக்கு திசை அதிர்ஷ்டத்தை தரும். அதேபோல் எண் 8 ம் வெள்ளை நிறமும் அதிர்ஷ்டங்களைக் கொடுக்கும்.
விருச்சிகம்

பயணங்கள் மேற்கொள்ளும் சூழல் ஏற்பட்டால் தவிர்க்காமல் செல்லுங்கள். அதன் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும் வாய்ப்பு இருக்கிறது. உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடன் பணிபுரியும் ஊழியர்களால் ஆதாயம் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உறவினர் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மேலதிகாரிகள் உங்கள்மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பார்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.
மீனம்

உங்களுடைய வழக்கமான குண நலன்களில் இருந்து கொஞ்சம் வேறுபட்டே நடந்து கொள்வீர்கள். விளையாட்டு வீரர்களுக்கு பாாட்டுக்கள் வந்து குவியும். வீடு கட்டுவதற்கான முயற்சிகள் மேலோங்கும். வியாபாரத்தில் உங்களுடைய புதிய அணுகுமுறையால் லாபம் அதிகமாகும். தன்னம்பிக்கைளுடன் நினைத்த காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். இன்று நீங்கள் எதை தொட்டாலும் அது உங்களுக்கு பொன்னாக மாறும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமாக இருக்கும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்