தென்னிலங்கையை துவம்சம் செய்த டொனாடோ சூறாவளி! சுழலில் சிக்கிய பல வீடுகள்

தென்னிலங்கையில் வீசிய சுழல் காற்றினால் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பலந்தோட்டை, ஹுங்கம பிரதேசத்தில் இன்று அதிகாலை வீசிய காற்றினால் 20 வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சேத விபரம் தொடர்பில் ஹம்பாந்தோட்டை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆய்வு செய்து வருகிறது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நேற்றிரவு முதல் பெய்த கடும் மழையுடன் வீசிய பலத்த காற்று காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவொரு டொனாடோ சூறாவளியாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவி்ததுள்ளது.

இந்த காற்று 200 மீற்றர் தூரம் வரை வீசியுள்ள நிலையில் மரம் ஒன்று உடைந்து வீழ்ந்து வீடொன்றிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் மின்சார தூண்களுக்கும் பெருமளவு பாதிப்படைந்துள்ளன. இதனால் அந்தப் பகுதியில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்