இந்து சமய வெளிவிவகார பிரதி அமைச்சராக இஸ்லாமியரை நியமித்தமைக்கு கடும் கண்டனம்…

செய்தியாளர் :காந்தன்

அம்பாறை மாவட்ட இந்து நிறுவனங்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்த இந்து சமய வெளிவிவகார பிரதி அமைச்சராக இஸ்லாமியரை நியமித்தமைக்கு கடும் கண்டனப் பேரணி இன்று பி.ப 5.00 மணியளவில்  அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு வம்மியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

இந்து மக்களின் பிரதிநிதியாக வருபவர் ஒரு இந்துவாகத்தான் இருக்க வேண்டும் ஆனால் நாட்டின் ஜனாதிபதி அதனை செய்ய தவறி ஒட்டுமொத்த இந்து மக்களையும் அவமானபடுத்தியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த விபுலானந்தா சிறுவர் இல்லத் தலைவர் கூறுகையில் இந்த சம்பவம் எங்களை மனவேதனை அடையச் செய்துள்ளது. நாங்கள் உண்ணும் உணவிற்கும்,கலாசாரத்திற்கும் இடையே வேறுபாடுகள் உண்டு எங்களது இந்து கலாசாரம் தெரியாத ஒருவரை இந்து அமைச்சராக இருந்து எதனை செய்யப்போகின்றார். இந்து ஒருவரை பிரதி அமைச்சராக நியமிக்குமாறு கூறினார்.

மேலும் ஆலய பிரதி நிதிகள்,அமைப்புக்களின் பிரதி நிதிகள் கருத்து தெரிவிக்கையில் நல்லாச்சி உருவாக்குவதிற்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்கியிருந்தார்கள் இவ்வாறான செயற்பாடுகளால் அரசாங்கம் தமிழ் மக்களை அவமதிக்கும் செயலாகும் ஏனவும் வாசகங்கள் எழுதிய பதாதைகள் ஏந்தியவாறு கண்டனப் பேரணி இடம்பெற்றது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்