இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் பலி – பலர் காயம்

கொழும்பு – குருணாகல் பிரதான வீதியில் தனியார் பேருந்துகள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

அலவ்வ பகுதியில் ஏற்பட்ட விபத்து காரணமாக ஒரு பேருந்து மாஓயவுக்குள் புரண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.

தற்போது அலவ்வ வைத்தியசாலையில் காயமடைந்த 25 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

கல்னேவயில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்தும், கொழும்பில் இருந்து கந்துருவெல நோக்கி பயணித்து கொண்டிருந்த தனியார் பேருந்துகள் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்