மாகாவலி கங்கையில் தவறி விழுந்த வெளிநாட்டவர் பலி

மாகாவலி கங்கையில் தவறி வீழ்ந்து வெளிநாட்டு வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சைக்கிள் ஓட்டப்போட்டியின் இடையே நேபாள நாட்டை சேர்ந்த வீரர் ஒருவர், மகாவலி கங்கையில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

மினிபே பாலம் ஊடாக பயணித்துக் கொண்டிருந்த வேளை இந்த வீரர், மகாவலி கங்கையில் விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்