காலா படத்தில் இலங்கை வேந்தன்! புதிய சர்ச்சையில் சிக்கிய ரஞ்சித்

அண்மையில் வெளியாகிய நடிகர் ரஜினிகாந்த்தின் காலா திரைப்படம் பல சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது.

இயக்குநர் பா.ரஞ்சித் இன் இயக்கத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் தான் காலா.

இந்த திரைப்படத்தில் இந்துக்களின் மரபினையும், கடவுளையும் தாழ்த்துவது போலவும் இழிவு படுத்துவது போலவும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருப்பதாக அனைத்துத் தரப்பினராலும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை மன்னனான இராவணனை உயர்த்திக்காட்டியுள்ளதோடு, இந்துக்களின் கடவுள் என, இராமபிரானை தாழ்த்துவதாகவும் அமையப்பெற்றுள்ளது.

இராமாயணத்தில் இராவண வதத்தினை விபரிக்கும் புராண சொற்பொழிவில் இராவணனின் மேன்மைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அத்துடன் இதில் இராமனை சிறுமை செய்வதைத் தவிர வேறேதும் புதுமைகள் இல்லை என குறிப்பிடப்படுகின்றது.

இதன் மூலம் ரஜினி உணர்வாலும், வர்ணத்தாலும் இராவண ஜாதி என்பதை எடுத்தியம்புகின்றார் இயக்குநர் ரஞ்சித்.

இந்நிலையில், ரஞ்சித் கேலி செய்யும் அதே இந்துமதத்தில், இரஞ்சித் போற்றும் இராவணனும் இந்துகடவுளாக மதிக்கப்படுகின்றார் என்பதை ரஞ்சித் அறியவில்லையா என பலரும் கேள்விகள் எழுப்புகின்றனர்.

மேலும், இராவணேஸ்வரன் என்று அழைக்கப்படுகின்ற இலங்கை வேந்தன் இராவணனுக்கு, நெல்லையப்பர் கோவிலில் தனி சந்நிதியே இருக்கின்றது என்பதை ரஞ்சித்திற்கு யாரும் கூறவில்லையா எனவும் கேள்விகள் எழுகின்றன.

இந்நிலையில், அவரது படத்தில் இலங்கை வேந்தனைப் பெருமைப்படுத்தும் ரஞ்சித் இந்து மதத்தை சிறுமைப்படுத்தியுள்ளமை அனைவரிடத்திலும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்