வவுனியா இலுப்பையடி வடிகாலில் காணப்படும் கழிவுகளால் மக்கள் அசௌகரியம்

வவுனியா இலுப்பையடி பகுதியில் உள்ள வடிகால்களில் வீசப்பட்டு காணப்படும் கழிவுகளால் அப்பகுதியில் பயணிக்கும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

வவுனியா, இலுப்பையடி பகுதி சனநெரிசல் மிக்க பகுதியாகவும் அதிக வர்த்தக நிலையங்களை கொண்ட பகுதியாகவும் உள்ளது. அப்பகுதியில் உள்ள வடிகாலில் கழிவுகளை வீசுப்பட்டுள்ளதுடன், அவை அகற்றப்படாது காணப்படுகின்றது. இதனால் அவ்வப்போது துர்நாற்றம் வீசுவதுடன் நுளம்பு பெருக்கமும் அதிகரித்துள்ளது.

இது தொடர்பில் வவுனியா நகரசபை கவனம் செலுத்தி அக்கழிவுகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவ் வடிகாலில் கழிவுகள் வீசாத வகையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் மக்கள் கோரியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்