தவராசாவுக்கு 7,000 ரூபா: 963 ரூபாவைக் காணோம் என்கிறது பொலிஸ்!

வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசாவின் வீட்டில் போடப்பட்ட பணப் பொதியில் 6 ஆயிரத்து 37 ரூபாவே இருந்தது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக வழங்கப்பட்ட 7,000 ரூபா பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்று சபை அமர்வில் வடக்கு எதிர்க்கட்சித் தலைவர் கோரியிருந்தார்.
அதையடுத்துக் கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள் பொதுமக்களிடம் ஒரு ரூபா வீதம் சேகரித்து நேற்று யாழ்ப்பாணம் வந்திருந்தனர்.
வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரைச் சந்திக்க முடியாததால் அவரது வீட்டு வாசலில் பணப் பொதியைக் கட்டிவிட்டுச் சென்றனர். வீட்டில் பாதுகாப்புக்கு இருந்த பொலிஸார் இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவித்தனர். அவர்கள் வந்து பொதியை மீட்டு ஆராய்ந்தனர். அந்தப் பொதியைக் கணக்கிட்டபோது 6 ஆயிரத்து 37 ரூபா மாத்திரமே இருந்தது என்று தெரிவிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்