21 வது உலகக் கிண்ண போட்டி இன்று

21 வது உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி இன்று ரஷ்யாவில் ஆரம்பமாகின்றது.

இலங்கை நேரப்படி இன்றிரவு 8.30 அளவில் முதல் போட்டி இடம்பெறவுள்ளது.

அதில் குழு ஏ யில் இடம்பெற்றுள்ள போட்டியை நடத்தும் ரஷ்யாவும் சவுதி அரேபியாவும் பங்கேற்கின்றன.

இந்த முறை உலக கிண்ண போட்டிகளில் 32 அணிகள் பங்கேற்கின்றன.

அவை எட்டுக் குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

இறுதியாக 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற உலக கிண்ண இறுதி போட்டியில் ஜெர்மன் அணி கிண்ணத்தை வென்று நடப்பு செம்பியனாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 2026ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் கூட்டாக நடத்த உள்ளன.

இந்த மூன்று நாடுகளும் கூட்டாக அளித்த முன்மொழிவுக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் 134 உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

எதிர்த்து, கால்பந்து உலக கிண்ணத்தை நடத்த முன்மொழிவை சமர்பித்திருந்த மொராக்கோவுக்கு 65 உறுப்பு நாடுகளே ஆதரவு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்