மண்ணில் புதைந்த பிணங்களை திருடி விற்கும் சிறுமி- பதற்றத்தில் கிராமவாசிகள்

தென்னாப்பிரிக்காவின் வடகோடியில் அமைந்திருக்கக்கூடிய லிம்போபோ என்ற மாகாணத்தில் புதைத்திருந்த பிணத்தை காணவில்லை என்று பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதலில் பொலிஸார் இதனை கண்டுக் கொள்ளவில்லை, ஆனால் அடுத்தடுத்து இது போல புதைக்கப்பட்ட பிணங்களை காணவில்லை என்று தொடர்ந்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்பின்னர், பொலிஸ் களத்தில் இறங்கி விசாரணையை ஆரம்பித்துள்ளது.இரண்டே நாட்களில் பொலிஸார் அந்த கும்பலை கண்டுபிடித்தார்கள். குற்றவாளியை கண்டு அந்த ஊரே ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்தது விட்டது.

இரண்டு நபர்கள் தான் இதில் ஈடுப்பட்டிருக்கிறார்கள். ஒருவர் பதினேழு வயதே நிரம்பிய சிறுமி ஒருவரும் அவருடைய காதலரும் தான் இவ்வளவு நாளாக பிணங்களை திருடியிருக்கிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட சிறுமி கூறுகையில், நானும் என் காதலரும் இணைந்து தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டோம்.

நாங்கள் வசிக்கும் கிராமம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருக்கக்கூடிய கிராமத்தில் யார் இறந்தாலும் பெரும்பாலும் இங்கு தான் புதைப்பார்கள்.
ஒரு சிலர் மட்டுமே தங்களது வீட்டு தோட்டத்தில் புதைத்துக் கொல்வார்கள். நாங்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளும் பகுதியே இது தான்.
அதனால், புதிதாக குழி தோண்டுகிறார்கள், ஆட்கள் நடமாட்டம் தெரிகிறது என்று சொன்னாலே இன்றைக்கு இங்கு ஒரு பிணத்தை புதைக்கப்போகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு விடுவோம்.

பெரும்பாலும் இந்த பகுதியில் ஆள்நடமாட்டமே இருக்காது. பிணத்தை புதைக்கிற நாளுக்கு மட்டும் வருவார்கள் பிணத்தை புதைத்து விட்டு சென்று விடுவார்கள்.

அன்றைக்கு இருட்டியதும், நானும் என் காதலனும் மண்வெட்டியுடன் வருவோம். டார்ச் நான் பிடித்துக் கொள்ள அவன் தோண்டுவான்.

பிணத்தை வெளியே எடுத்து அவற்றின் வயதைப் பொருத்து உள்ளுருப்புகளை திருடுவோம். முதியவர்கள் என்று சொன்னால் உள்ளுறுப்புகள் எடுப்பதில்லை மாறாக அவர்களின் சருமம் எடுத்துக் கொள்வோம்.

இளவயதுக்காரர்கள் என்று சொன்னால் முழு உடலையும் எடுத்துக் கொள்வோம். எடுத்துச் செல்ல முடியாது என்பதால் முழு உடலையும் சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துச் செல்வோம்.

பெரும்பாலும் இறந்து சில மணி நேரங்களுக்கு முன்னதாகவே சில உறுப்புகளை எடுக்க வேண்டும் அப்போது தான் நாங்கள் வாங்கிக் கொள்வோம் என்று சொல்வார்கள்.

ஆனால் இவர்கள் இறந்து சடங்குகள் எல்லாம் செய்து விட்டு புதைக்க ஒரு நாள் எடுத்துக் கொள்கிறார்கள்.

அதன் பிறகு அன்றைய இரவோ அல்லது மறுநாள் இரவோ தான் நாங்கள் இந்த வேலையை செய்கிறோம் என்பதால் பெரும்பாலும் அவை விலை போகாது. அந்த நேரங்களில் எல்லாம் கறியாக குறைந்த விலைக்கு விற்றுவிடுவோம்.

உனக்கு பயமாக இல்லையா? இவ்வளவு சிறிய வயதில் இப்படி எல்லாம் செய்கிறாய் என்று ஊர்மக்களும் பொலிஸார் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு என்னைப் பார்த்துக் கொள்ள யாருமில்லை வீட்டில் ஒரு வேலை உணவுக்கு கூட ரொம்பவும் கஷ்ட்டப்பட்டேன்.சந்தையில் இதற்கு நல்ல கிராக்கி இருப்பது தெரிந்தது. இந்த பிணங்களை திருடி விற்க ஆரம்பித்ததும் நான் நன்றாக சாப்பிடுகிறேன் என்றாராம்.

இதை கேட்டு மீண்டும் அதிர்ச்சியடைந்த பொலிஸார் இருவரையும் சிறையில் அடைத்துள்ளனர். இந்த உலகை சுற்றி நாம் எதிர்ப்பார்க்காத ஏன் கற்பனை கூட செய்து பார்க்காத விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் சிறந்த உதாரணமாக இருக்கும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்