பெண்கள் ஆண்களின் எந்த இடத்தை முதலில் பார்ப்பார்கள்!

முதல் முறையாக ஒரு ஆணை பார்க்கும் போது பெண்கள் எதை எல்லாம் கவனிக்கிறார்கள் என்பது நம் யாருக்குமே தெரியாது. ஆண்கள் பெண்களை எப்படி பார்ப்பார்கள் என்று வேண்டுமானால் நாம் யோசித்திருப்போம். ஆனால் பெண்கள் ஆண்களை எப்படி பார்ப்பார்கள் என்று நாம் பெரிதாக யோசிச்சதில்லை.
ஆனால் உண்யிலேயே இப்படி கொஞ்சம் யோசித்துத்தான் பாருஞ்களேன். பெண்கள் ஆண்களை எப்படி பார்க்கிறார்கள் என்று… என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாமா? முதல் முறையாக ஆண்களை பார்க்கும் பெண்கள்

பெண்கள் எல்லா விஷயங்களையுமே கவனமாக பார்க்க கூடியவர்கள். ஆண்கள் போல் நுனிப்புல் மேய்பவர்கள் அல்ல. முதல்முறை அவர்களைப் பார்க்க செல்லும் போது நீங்கள் நன்றாக போக வேண்டியது அவசியம்.
பெண்கள் கண்களை பார்த்தே அனைத்தையும் கண்டு பிடித்துவிடுவார்கள். நீங்கள் எங்கே பார்த்து பேசுகிறீர்கள், நீங்கள் உண்மையாக தான் பேசுகிறீர்களா, உங்களது நோக்கம் என்ன என்பதை எல்லாம் கண்களை பார்த்தே பெண்களால் கண்டுபிடித்து விட முடியும்.

நீங்கள் ஃபார்மலான சட்டை அணிந்து செல்கிறீர்களா அல்லது டி சர்ட் அணிந்து செல்கிறீர்களா என்பது அவசியம் அல்ல. அதன் நிறம் அவர்களின் மனதை கவர்ந்த நிறமா என்பது தான் முக்கியம். எனவே அவருக்கு பிடித்த நிறத்தில் அல்லது கருப்பு, மெரூன், பச்சை ஷேடுகளில் ஆடை அணிந்து செல்லுங்கள்.
பெண்கள் முதலில் அதிகமாக கவனிப்பது இதை தான். நீங்கள் அவரது முன் எப்படி அமருகிறீர்கள். எப்படி பேசுகிறீர்கள் என்பதை தான் அதிகமாக கவனிப்பார்கள். எனவே நீங்கள் நாகரீகமான முறையில் நடந்துகொள்ள வேண்டியது அவசியம்.

நீங்கள் எந்த அளவுக்கு நம்பிக்கைக்குரியவராக நடந்துகொள்கிறீர்கள், அவர்கள் உங்களுடன் இருக்கும் போது எந்த அளவுக்கு பாதுகாப்பாக உணர்கிறார்கள் என்பதை எல்லாம் கவனிப்பார்கள்.
நீங்கள் அந்த பெண்ணுக்கோ அல்லது உங்களை சுற்றி உள்ளவர்களின் கேள்விகளுக்கோ எப்படி விடையளிக்கிறீர்கள் என்பதை வைத்தே பெண்கள் உங்களது குணத்தை எடை போட்டுவிடுவார்கள். அவர்களது பார்வையில் இருந்து எதுவும் தப்பிக்க முடியாது.

Young couple in love at a coffee shop

பெண்கள் ஆண்களிடம் அதிகம் விரும்புவது அவர்களிடம் உள்ள நகைச்சுவை உணர்வை தான். உங்களுக்கு நகைச்சுவை உணர்வு இருக்கிறதா என்பதை அவர்கள் கண்காணிப்பார்கள்.பெண்கள் உங்களது கைகளை கவனிப்பார்கள் என்று கூறினால் உங்களால் நம்ப முடியாது . ஆனால் நீங்கள் அவர்களுக்காக நாற்காலிகளை தருவது, கைகளின் அசைவுகள் போன்றவற்றைக் கண்காணித்துக்கொண்டு தான் இருப்பார்கள்.


இவை அனைத்தையும் பார்த்து உங்களை ஓரளவுக்கு எடை போட்டிருப்பார்கள். இறுதியாக உங்களது சிரிப்பை தான் அவர்கள் பார்ப்பார்கள். ஒரு அழகான, அடக்கமான சிரிப்பு மட்டும் போதும் அவர்களை கவர.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்