துருக்கியில் இன்று – அரச தலைவர் தேர்தல்!!

துருக்கியில் இன்று அரச தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 2019 நவம்பர் 3 ஆம் திகதி நடாத்தப்படவிருந்த தேர்தலே இன்று நடைபெறவுள்ளது.

அரச தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவர் 50 வீதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெறாத விடத்து, அதிகமான வாக்குகளைப் பெறும் இருவரைத் தெரிவு செய்து இரண்டாவது கட்ட வாக்குப் பதிவு இடம்பெறும். இதற்கான சந்தர்ப்பம் எழுந்தால், இதனை எதிர்வரும் ஜூலை 8 ஆம் திகதி நடாத்தவுள்ளதாகவும் அந்தநாட்டின் தேர்தல் சபை அறிவித்துள்ளது.

64 வயதுடைய துருக்கி ரெச தலைவர் அர்துகானுக்கு சவாலாக 54 வயதுடைய முஹரீம் இன்சிக் போட்டியிடுகின்றார். இந்த இருவரும் கலந்துகொண்ட இறுதித் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் நேற்று இஸ்தான்புல் நகரில் நடைபெற்றதாகக் கூறப்படுகின்றது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்