இன்றைய ராசிபலன் -28-06-2018

மேஷம்

மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்களின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலையை பகிர்ந்து கொள்வார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் லாபம் குறையும். உத்யோகத்
தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுக்க வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

மிதுனம்

மிதுனம்: சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண ேபச்சுவார்த்தை வெற்றியடையும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி புது பொறுப்பை ஒப்படைப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

சிம்மம்

சிம்மம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். பிரார்த்தனையை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சி தரும் செய்தி வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.

கன்னி

கன்னி: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

துலாம்

துலாம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தைரியம் கூடும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

தனுசு

தனுசு: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் இழுத்துப் போட்டு செய்வீர்கள். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.

மகரம்

மகரம்: குடும்ப ரகசியங்களை மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் டிக்கையாளர்களிடம் நயமாகப் பேசுங்கள். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வரக்கூடும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கும்பம்

கும்பம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். சிறப்பான நாள்.

மீனம்

மீனம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் தங்கும். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்