இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்ட சீன நாட்டவர்

இந்து கலாசாரத்தின் மீதுள்ள பற்றுக் கொண்ட சீனாவைச் சேர்ந்த காதலர்கள், இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

சீனாவின் பெய்ஜிங் மாகாணத்தைச் சேர்ந்த, வைத்தியரான யான் மற்றும் ஷாங்காய் மாகாணத்தைச் சேர்ந்த, அழகுக்கலை நிபுணரான ரூபிங் ஆகியோர் காதலித்து வந்த நிலையில் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளனர்

இவர்களின் திருமணம் தமிழகத்தில் நேற்று நடந்துள்ளது. குறித்த இருவரும் திருமணத்திற்காக நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த காரைமேடு சித்தர்புரத்திற்கு வந்திருந்தனர்.

சித்தர்களை வழிபட்டு, கோ பூஜை, முதியவர்களுக்கு பாத பூஜை செய்தனர். வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியம் இசைக்க, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, மாங்கல்ய தாரணம் செய்து, யான் – ரூபிங் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

மேலும், திருமணத்திற்கு வந்து வாழ்த்திய கிராம மக்களை வணங்கி, ஆசி பெற்றதுடன், அனைவருக்கும் விருந்தளித்து மகிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்