ஆனி மாத இலக்கியக் கலந்துரையாடல்

 

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் ஆனிமாத கலந்துரையாடலை நடாத்தவுள்ளது.
ரொறன்டோ தமிழ்ச்சங்க மண்டபத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி மாலை 3 மணி தொடக்கம் இரவு 7 மணி வரை “அறிவியல் தமிழ்2 ” எனும் தலைப்பில் இந்த இலக்கியக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் சிறப்பு பேச்சாளர்கள் பல்வேறு தலைப்புக்களில் தமது பேச்சை ஆற்றவுள்ளனர்.இதன்படி “கம்பராமாயாணத்தில் மேலாண்மை” எனும் தலைப்பில் பேராசிரியர் சு.பசுபதி,“தமிழியல் பாரம்பரியத்தில் அறிவியல் தடங்கள்” எனும் தலைப்பில் கலாசூரி ஆ.சிவநேசச்செல்வன்,“திருமந்திரத்தில் அறிவியல் தடங்கள்” எனும் தலைப்பில் வைத்திய கலாநிதி இ.லம்போதரன்,ஐயந்தெளிதல் அரங்கில் “புத்தகம் புதிது” எனும் தலைப்பில் முனைவர் செல்வநாயகி ஸதாஸ் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.
எனவே அனைவரையும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறும் அனுமதி இலவசம் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்