தரையில் வீழ்ந்து தீப்பிடித்த வானூர்தி- ஐவர் உயிரிழப்பு!!

மும்பையில் தனியாா் நிறுவனத்துக்கச் சொந்தந்தமான சிறிய ரக வானூர்தி ஒன்று வானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தில் வீழ்ந்து நொறுங்கியது. தரையில் விழுந்த உடன் வானூர்தி தீப்பிடித்து எரியத் தொடங்கியதால் மீட்பு பணிகளை மேற்கொள்ள சிரமம் ஏற்பட்டது.

இதனைத் தொடா்ந்து தீயணைப்பு வீரா்களின் உதவியுடன் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 12 இருக்கைகள் கொண்ட சிறிய ரக வானூர்தியில் விமானி உள்பட 4 போ் உயிாிழந்திருப்பதாக கூறப்படுகிறது.

மும்பை வானூர்தி நிலையத்திற்கு 3 கிலோ மீற்றருக்கு அப்பால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்துக்குள்ளான வானூர்தி இதற்கு முன்னா் உத்தரபிரதேச அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்