மைக்கேல் ஜாக்சனின் தந்தை 89 வயதில் காலமானார்!!

இசை கலைஞரும், பிரபல பாப் உலக சூப்பர் ஸ்ரார் மைக்கேல் ஜாக்சனின் தந்தை ஜோ ஜாக்சன் காலமானார். அவருக்கு வயது 89.

புற்று நேயால் அவதிப்பட்டு வந்த ஜோ ஜாக்சன் கடந்த புதன்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தார் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ஜோ ஜாக்சனின் பேரனும், மைகேல் ஜாக்சனின் மகனுமாகிய பிரின்ஸ் மைக்கேல் ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார், அதில், ”ராஜாவுக்கு இரங்கல்கள் இந்த மனிதர் மனவலிமை மற்றும் அர்ப்பணிப்புக்கு எடுத்துகாட்டாக வாழ்ந்தார்.. ஐ லவ் யூ” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜோ ஜாக்சனின் மகள் லா டோயா, ”நான் உங்கள் மீது அன்பு வைத்திருப்பேன். நீங்கள் இந்த உலகில் பிரபலமான குடும்பமாக நம்மை உருவாக்குனீர்கள். நான் உங்களுடன் இருந்த தருணங்களை என்றும் மறக்க மாட்டேன்” என்று கூறியுள்ளார்.

மைக்கேல் ஜாக்சன் மறைவு ஜூன் 25 ஆம் திகதி நடந்தது. இந்த நிலையில் மூன்று நாள் கழித்து அவரது தந்தையான ஜோ ஜாக்சனும் அதே மாதத்தில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜோ ஜாக்சனின் மறைவுக்கு இசை உலகினரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்