பிரித்தானியாவில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞன்

பிரித்தானியாவில் வாழும் இலங்கையர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட தீடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

நைனமடு பிரதேசத்தில் பிறந்து வளர்ந்து பல வருடங்களுக்கு முன்னர் பிரித்தானியா சென்ற 43 வயதான ரொஷான் சுரங்க பெரேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த ரொஷான் சுரங்க பாடசாலை காலம் முதல் தேசிய மட்ட விளையாட்டு போட்டிகளில் திறமையான ஒருவராக திகழ்ந்துள்ளார். தொழிலுக்காக முதலாவதாக இத்தாலி சென்றவர் பின்னர் பிரித்தானியாவில் குடியேறினார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் லண்டனில் தனது குடும்பத்தினருடன் வாழும் வீட்டிற்கு அருகில் உள்ள மைதானத்தில் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்ட போது போது திடீர் சுகயீனமடைந்துள்ளார்.

இதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் உயிரிழந்துள்ளார். அவரது இறுதி அஞ்சலி நடவடிக்கைகள் பிரித்தானியாவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்