இங்கிலாந்தை திணறடித்த பெல்ஜியம்…

ஃபிபா உலகக் கிண்ணம் தொடரில் இன்று நடந்த ஜி பிரிவு ஆட்டத்தில் இங்கிலாந்து, பெல்ஜியம் சந்தித்தன. ஏற்கனவே நாக் அவுட் சுற்றுக்கு இரண்டு அணிகளும் தகுதிபெற்றுள்ள நிலையில் 1-0 என வென்று ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தது பெல்ஜியம்.

ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, பி பிரிவில் இருந்து ஸ்பெயின், போர்ச்சுகல், சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டென்மார்க், டி பிரிவில் இருந்து குரேஷியா, அர்ஜென்டினா,

இ பிரிவில் இருந்து பிரேசில், சுவிட்சர்லாந்து, எப் பிரிவில் இருந்து ஸ்வீடன், மெக்சிகோ, ஜி பிரிவில் இருந்து பெல்ஜியம், இங்கிலாந்து, எச் பிரிவில் இருந்து கொலம்பியா, ஜப்பான் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

ஜி பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் துனீஷியா, பனாமாவை சந்தித்தது. மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து, பெல்ஜியம் மோதின.

ஜி பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் பெல்ஜியம் 3-0 என பனாமாவை வென்றது. இங்கிலாந்து 2-1 என துனீஷியாவை வென்றது.

மற்றொரு ஆட்டத்தில் துனீஷியாவை 5-2 என பெல்ஜியம் வென்றது. இங்கிலாந்து 6-1 என பனாமாவை வென்றது. இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் இரண்டு ஆட்டங்களிலும் வென்றுள்ளன.

தற்போதைய நிலவரப்படி இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் தலா 6 புள்ளிகளுடன் உள்ளன. அடுத்தச் சுற்றுக்கு இரண்டு அணிகளும் முன்னேறியுள்ளன.

துனீஷியா மற்றும் பனாமா இரண்டு தோல்விகளை சந்தித்து பிரிவுச் சுற்றுடன் வெளியேறுகின்றன. முதலிடத்தைப் பிடிக்கப் போவது யார் என்ற போட்டியில் இங்கிலாந்து, பெல்ஜியம் இருந்தன.

முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து, 1966ல் கிண்ணத்தை வென்றது. அதன்பிறகு அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

கடந்த உலகக் கிண்ணம் தொடரில் பிரிவு சுற்றிலேயே வெளியேறியது. 11வது முறையாக உலகக் கிண்ணம் தொடரில் விளையாடும் பெல்ஜியம் கடந்த உலகக் கிண்ணம் தொடரில் காலிறுதி வரை நுழைந்தது.

உலகக் கிண்ணம் தொடரில் இதுவரை இரு அணிகளும் விளையாடிய இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் இங்கிலாந்து வென்றது. மற்றொன்று டிராவானது.

இதுவரை நடந்துள்ள ஆட்டங்களில் உருகுவே மற்றும் குரேஷியா மட்டுமே 3 லீக் ஆட்டங்களிலும் வென்றுள்ளன.

அந்த வாய்ப்பு தற்போது இங்கிலாந்து மற்றும் பெல்ஜியத்துக்கு கிடைத்தது. இன்றைய ஆட்டத்தில் 51வது நிமிடத்தில் ஜாமுஹாஜ் கோலடிக்க பெல்ஜியம் 1-0 என இங்கிலாந்தை வென்று ஹாட்ரிக் வெற்றி பெற்றது.

மட்டுமின்றி நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்து கொலம்பியாவை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்