அமெரிக்காவில் பத்திரிகை நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு-ஐவர் உயிரிழப்பு

அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் உள்ள பத்திரிகை நிறுவனம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
நேற்று மதியம் அப்பகுதிக்கு வந்த மர்ம ஒருவர் பத்திரிகை அலுவலத்திற்குள் நுழைந்து அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதில் ஐந்து பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ள போதிலும், தாக்குதலுக்கான காரணம் மற்றும் சந்தேகநபர் யார் என இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்