அவுஸ்திரேலியா தப்பிச் செல்ல முற்பட்ட ஈழ அகதிகள்! நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

சட்டவிரோதமான முறையில், அவுஸ்திரேலியா தப்பிச் செல்ல முற்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகள் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த வழக்கை அடுத்த மாதம் 26ம் திகதிக்கு ஒத்திவைப்பதாக இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை நீதிமன்றம் அறிவித்துள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்து.

இதன்போது இலங்கை அகதிகள் 4 பேர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர். 2014ம் ஆண்டு ஓகஸ்ட் 8ம் திகதி புதுச்சேரி மற்றும் திருச்சி இலங்கை அகதிகள் முகாம்களில் இருந்து 14 பேர் தப்பினர்.

அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள ஓரியூரில் இருந்து, படகு மூலம் கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், பொலிஸார் அவர்களை கைது செய்தனர்.

இது குறித்த வழக்கு திருவாடானை குற்றவியல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், கைது செய்யப்பட்ட 14 பேரும் பிணையில் விடுதலையாகியிருந்தனர்.

இந்நிலையில், குறித்த வழக்கு இன்று இடம்பெற்ற போது இலங்கை அகதிகள் நான்கு பேர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர். எனினும் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நபர் ஒருவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தலைமறைவாகியுள்ள நபருக்கு பிணை வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திருவாடானை நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை வரும் ஜூலை 26ம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்