பெண் போராளி மாலதியின் சகோதரன் மீது கொடூர தாக்குதல்!

லண்டனில் இலங்கை தமிழர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களினால் தாக்குதலுக்கு உள்ளானதாக சிங்கள ஊடகமான திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

சசிதரன் லக்ஷமணன் என்பவரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலை புலிகள் அமைப்பின் பிரதான பெண் போராளியான மாலதியின் சகோதரன் எனவும், நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் இலங்கையில் இருந்து பிரித்தானியா சென்றதாகவும் குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மனித உரிமை ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட காணாமல் போனோர் பட்டியலில் இவரது பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிதரன் லக்ஷமணன் விடுதலை புலிகள் அமைப்பில் ஆயுத படையின் செயற்பாட்டாளராக செயற்பட்டுள்ளார்.

2009ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்னி மோதலில் இவரது கால்கள் விழுப்புண் அடைந்துள்ளன.. இவரது சகோதரி மாலதி பிரான்ஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ளதாக திவியின மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்