காரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய எட்டாம் சடங்கு…

(தனுஜன் ஜெயராஜ்)

கிழக்கிலங்கை காரைதீவு அருள்மிகு ஸ்ரீபத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சப நிகழ்வானது 13.06.2018 அன்று கதவு திறக்கப்பட்டு தொடர்ந்து ஒன்பது நாள் திருச் சடங்குகள் நடை பெற்றதனைத் தொடர்ந்து 22-06-2018 வெள்ளிக்கிழமை அன்று தீமிதிப்பு நிகழ்வுடன் நிறைவடைந்தது.

இதனை அடுத்து எட்டு நாட்கள் கடந்த நிலையில் செய்யப்படும் எட்டாம் சடங்கு நிகழ்வானது 29.06.2018 வெள்ளிக்கிழமை அதாவது இன்று இடம்பெற்றது. இதன்போது தீப்பாய்ந்த பக்த அடியார்கள் தீக்குழிக்கு பால்வார்த்தனர் ,அதனைத் தொடர்ந்து அம்பாளுக்கான பூசைகள் இடம்பெற்றது. இதன்போது நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.

படங்கள்-குகதீபன்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்