சிறப்புற நடைபெற்ற வெலிமடை முஸ்லிம் மகா வித்தியாலய பொன்விழா

வெலிமடை கல்வி வலயத்திற்குட்பட்ட வெலிமடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 50வது ஆண்டு பொன்விழா நிறைவு நாள் நிகழ்வு 30.06.2018 அன்று வித்தியாலயத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

வெலிமடை முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முஸ்லிம் கலை, கலாசார நிகழ்வுகளுடன், பரிசளிப்புகளும், கௌரவிப்புகளும் இடம்பெற்றதுடன், வித்தியாலயத்தின் கடந்தகால பதிவுகள் அடங்கிய நூல் ஒன்றும் வெளியிடப்பட்டது.

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர, மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்