காணாமற்போனோரின் உறவுகளுக்காக கனடாவில் ஆர்ப்பாட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களின் 500வது நாள் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்பாட்டம் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

டொரோண்டோவில் அதிக வெப்பம் காரணமாக அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும் வெய்யிலையும் பொருட்படுத்தாது Toronto City ர்யடடலுக்கு முன்பாக கனடாவில் இடம்பெற்ற இந்த போராட்டம் அனைவரையும் ஈர்த்துள்ளது.

இலங்கையில் இறுதி கட்ட யுத்தம் நடைபெற்ற போது பலர் காணாமல் போனமையும் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இராணுவத்தினரிடம் சரணடைந்த பொது மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில் பலர் பலவந்தமாக காணமல் ஆக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களும் பின்னர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் மீட்டுத்தருமாறு காணாமல் போனவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்