உத்தரகாண்டத்தில் பஸ் விபத்து – 48 பயணிகள் உயிரிழப்பு

உத்தரகாண்ட் மாநிலம், பாரி மாவட்டத்தில் 200 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்துவிபத்துக்குள்ளானதில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பலியானதுடன் பலர் படுகாயமடைந்தனர்.

இதேவேளை பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உத்தரகாண்ட் மாநிலம், பாரி மாவட்டத்தில் பாகுன் நகரில் இருந்து ராம் நகருக்கு தனியார் பஸ் ஒன்று இன்று காலை 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டது. மலைப்பகுதிச் சாலை என்பதை அறியாமலும், பஸ்ஸில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றியதாகக் கூறப்படுகிறது.

கிவீன் கிராமம் அருகே பஸ் வந்தபோது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலை ஓரத்தில் இருந்த 200 அடிபள்ளத்தாக்கில் கவிழ்ந்து, உருண்டது. இந்த விபத்தில் பஸ் பெருத்த சேதமடைந்தது. பஸ்ஸின் மேற்கூரையின் மீதும், பஸ்ஸுக்குள் அமர்ந்திருந்த பயணிகள் தூக்கி வீசி எறியப்பட்டனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 40-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்