வெளியே தெரிந்த காதல்-பிரித்து விடுவார்கள் என நினைத்து விபரீத முடிவு எடுத்த ஜோடி

காதல் வெளியே தெரிந்ததால் குடும்பத்தார் தங்களை பிரித்து விடுவார்கள் என்று பயந்த காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது.

கிருஷ்ணகிரிக்கு அருகில் உள்ள ஊரான மாதிணாயனபள்ளி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷின் மகன் அசோக்கும் அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகள் மாதேவியும் காதலித்து வந்தனர்.இருவரும் வெவ்வேறு இடங்களில் வெளியூரில் வேலை பார்க்கின்றனர் என்பதால் தொலைபேசி மூலம் இவர்கள் காதல் வளர்ந்து வந்தது. இரண்டு வருடங்களாக தொடர்ந்த இவர்களது காதல் சமீபத்தில் ஊருக்கு வந்த போது ஊராருக்கும் பெற்றோருக்கும் தெரிய வந்தது.

இதனால் தங்களை பெற்றோர் பிரித்து விடுவார்கள் என்று பயந்த காதலர்கள் வீட்டின் முன்பு விஷம் குடித்து விழுந்தனர். மயங்கிய இருவரையும் உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர், இருப்பினும் சிகிச்சை பலனின்றி அசோக்கும் மாதேவியும் அடுத்தடுத்து இறந்தனர்.கொஞ்சம் பொறுமையாக இருந்திருந்தால் நாங்களே திருமணம் செய்து வைத்திருப்போம் என்று உறவினர்கள் கதறி அழுதது அந்த ஊரையே சோகத்தில் ஆழ்த்தியது.

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்