வாட்ஸ் ஆப் குழுக்களுக்கு வருகிறது புதிய வரையறை

வாட்ஸ் ஆப் மெசஞ்சர் செயலியில் வீடியோ அழைப்பு, குரல் வழி அழைப்பு, ஈமோஜிக்கள் போன்ற வசதிகள் உட்பட மேலும் பல வசதிகள் தரப்பட்டுள்ளன.

இவற்றுள் குழு சட்டிங் வசதியும் ஒன்றாகும்.

இதுரைவயில் இவ் வசதியில் எந்த ஒரு நபரும் மெசேஜ் செய்யக்கூடியதாக இருந்தது.

எனினும் இவ் வசதியில் ஒரு மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்படி குழு அட்மின் ஆனவர் யார் யார் மெசேஜ் செய்ய தகுதியானவர்கள் என அனுமதி வழங்கக்கூடியதாக இருக்கும்.

அதேபோன்று அட்மின் மாத்திரம் மெசேஜ் செய்யக்கூடிய வகையிலும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

இதன் மூலம் வாட்ஸ் ஆப்பினை ஆரோக்கியமான முறையில் பயன்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்