பாலியல் அடிமையாக விற்கப்பட்ட பெண்: நிர்வாண வீடியோ எடுத்ததாக கண்ணீர் பேட்டி

ஓமனில் பாலியல் அடிமையாக விற்கப்பட்ட பஞ்சாப் பெண் மீட்கப்பட்டுள்ள நிலையில் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரைச் சேர்ந்த 39 வயது பெண் கடந்த ஏப்ரல் மாதம் வீட்டு வேலைக்காக துபாய்க்கு அனுப்பப்பட்டார்.

பின்னர் ஓமனில் பாலியல் அடிமையாக இருந்த நிலையில் தற்போது மீட்கப்பட்டுள்ளார்.

இந்தியாவுக்கு திரும்பிய அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த பிப்ரவரி மாதம் ராகுல் என்கிற டிராவல் ஏஜெண்ட் துபாயில் மாதம் ரூ30,000 சம்பளத்துடன் வீட்டு வேலை இருப்பதாக என்னிடம் உறுதியளித்தார்.

இதற்காக அவருக்கு ரூ 55,000 பணம் கொடுத்து கடந்த ஏப்ரல் துபாய்க்கு சென்றேன், ஆனால் அங்கு ஓமனைச் சேர்ந்த சேக் ஒருவருக்கு பாலியல் அடிமையாக விற்பனை செய்யப்பட்டேன்.

கடந்த மே 5-ம் தேதி ஓமன் சேக்கிடம் இருந்து தப்பி துபாய் இந்திய தூதரகத்திடம் தஞ்சம் அடைந்தேன்.

பின்னர் எம்பி குர்ஜித் சிங் அஜூலா மூலமாக நான் மீட்கப்பட்டு இந்தியா வந்து சேர்ந்தேன்.

என்னைப் போல பல்வேறு நாடுகளில் இருந்து வீட்டு வேலைக்கு வந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் பெண்களை நிர்வாண வீடியோக்களும் எடுத்து வைக்கின்றனர்.

என்னுடன் அமிர்தசரஸை சேர்ந்த சிறுமி ஒருவரும் மீட்கப்பட்டுள்ளார். அந்த சிறுமியின் நிர்வாண வீடியோ ஓமன் சேக்குகளிடம் இருப்பதால் அப்பெண் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கிறார் என கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்