நடு வானில் கிருஷ்ணர் தோன்றினாரா…? -பூநகரி கடற்பரப்பில் நடந்தது என்ன?

பூநகரி நாச்சிக்குடா கடற்கரையில் சிறிகிருஸ்ணர் வானில் காட்சிகொடுத்தார் என்று குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் ஒளிப்படம் ஒன்று வைரலாகியுள்ளது.நேற்றுமுன்தினம் காலை 5.30 மணியளவில் சிறிகிருஸ்ணர் தோன்றினார் என்று சமூக வலைத்தளங்களில் சிலர் பதிவிட்டுள்ளனர்.

எனினும், இவ்வாறு எந்தச் சம்பவங்களும் நடைபெறவில்லையெனவும் இது போலியான தகவல் எனவும் பிரதேச மீனவர்கள் தெரிவித்துள்ளனர். முகநூலில் இவ்வாறான போலி வைரல் பதிவுகள் இடம்பெறுவது சாதாரண நிகழ்வாகி விட்டதும் பொதுமக்கள் இவற்றை உண்மையென நம்பி ஏமாறுவதும் அண்மைக்காலங்களாக அதிகரித்து வருகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்