பிரித்தானிய மகாராணியார் அறுவைச்சிகிச்சைக்கு மறுப்பு: காரணம் கேட்டால் அதிர்ந்துவிடுவீர்கள்

92 வயதாகும் பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத், இந்த வயதிலும் மிகவும் பரபரப்பாக தமது கடமைகளை சிறப்பாக ஆற்றிவருகிறார்.

கடந்த ஓரு வாரகாலமாக நடைபெற்ற Royal Ascot நிகழ்வில் புது உற்சாகத்துடன் முழுமையாக கலந்து கொண்டுள்ளார்.

மட்டுமின்றி கொமன்வெல்த் நாடுகளின் சிறந்த இளந்தலைமுறையினருக்கு விருது அறிவிக்கும் விழாவிலும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.

அரச குடும்பத்து புது உறுப்பினரான மேகன் மெர்க்கலுடன் இணைந்து உத்தியோகப்பூர்வ பயணம் ஒன்றையும் மேற்கொண்டுள்ளார்.

இருப்பினும் மகாராணியார் கடுமையான மூட்டு வலியால் அவதிப்பட்டு வருவது வெகுசிலருக்கே தெரிந்த விடயம் என கூறப்படுகிறது. உயிர் பிரியும் வலியையும் தாங்கிக் கொண்டு அவர் அனைத்து அரச விழாக்களிலும் புன்னகை மாறாமல் கலந்து கொண்டு வருகிறார்.

ஆனாலும் அறுவிசிகிச்சை செய்து கொள்ள மகாராணியார் இரண்டாம் எலிசபெத் மறுத்து வருவதாக கூறப்படுகிறது.

காரணம், அறுவை சிகிச்சையில் இருந்து முழுமையாக குணமடைய வெகு நாட்கள் ஆகும் எனவும், அதுவரை அலுவல்களை ஒத்தி வைக்க தம்மால் முடியாது என அவர் தமது நலம் விரும்பிகளிடம் தெரிவித்துள்ளார்.

Chelsea மலர் கண்காட்சியின் போது தமது நண்பர்களிடம் மூட்டு வலி பாடாய் படுத்துவதாக கூறி வருத்தப்பட்ட மகாராணியார், போதிய நேரம் இல்லாததாலையே தாம் அறுவை சிகிச்சை செய்துகொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இளந்தலைவர்களுக்கான விருது வழங்கும் விழாவில் மகாராணியார் கலந்து கொள்வது இதுவே கடைசி ஆண்டு என கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு முதல் இந்த விழாவினை இளவரசர் ஹரி மற்றும் மேகன் மெர்க்கல் இருவரும் தலைமையேற்று நடத்த உள்ளனர்.

இந்த நிலையிலேயே St Paul’s பேராலயத்தில் நடைபெற்ற ஜெப வேளையின்போது மகாராணியார் பாதியிலேயே அரண்மனை திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்