பிரேஸில், பெல்ஜியம் அணிகள் காலிறுதி போட்டிக்கு தகுதி

2018 பீபா உலக கிண்ண கால்பந்து தொடரின், 2ஆம் சுற்று ஆட்டத்தில் மேலும் இரண்டு போட்டிகள் நேற்று இடம்பெற்றன.

அதன்படி, பிரேஸில் மற்றும் மெக்சிகோ அணிகளுக்கு இடையிலான போட்டியில் பிரேஸில் அணி 2க்கு பூச்சியம் என்ற கோல் கணக்கில் மெக்சிகோ அணியை வெற்றிக்கொண்டது.

அதுபோல், பெல்ஜியம் மற்றும் ஜப்பான் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் பெல்ஜியம் அணி 3க்கு 2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வெற்றிக்கொண்டது.

இதுவரையில் இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் பிரான்ஸ், உருகுவே, ரஸ்யா, பெல்ஜியம், பிரேஸில் மற்றும் குரேஷியா ஆகிய அணிகள் காலிறுதி போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளன.

இந்தநிலையில் காலிறுதியில் விளையாடும் கடைசி இரண்டு அணிகளை தெரிவு செய்யும் போட்டிகள் இன்று இடம்பெறவுள்ளன.

அதன்படி, சுவிடன் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியும், கொலம்பியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியும் இன்றைய தினம் இடம்பெறவுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்