இந்த ராசிக்காரர்கள் இன்று ஜாக்கிரதையாக இருக்கணும்!

இன்றைய தினத்துக்கான(03.07.2018) ராசிபலன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் திடீரென முடியும். விடாப்பிடியாகச் செயல்பட்டு இலக்கை எட்டுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள்.
ரிஷபம்

வெளிவட்டாரம் சிறப்பாக இருக்கும். சொத்துக்களில் அதிரடி மாற்றங்களைச் செய்வீர்கள். அயல்நாட்டு பயணம் வெற்றி தருவதாக அமையும். விருந்தினர் வருகை உண்டு. சாதிக்க வேண்டு மென்ற எண்ணம்வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப் பார்கள். தைரியம் கூடும் நாள்.
மிதுனம்

கணவன்- மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் அக்கறை செலுத்துவீர்கள். உங்கள் மகளுக்கு எதிர்பார்த்தபடியே நல்ல வரன் அமையும். பணவரவு திருப்தி தரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் வரும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.
கடகம்

சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை லாவகமாகக் கையாளுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை கண்டறிவீர்கள். நவீன கலைப்பொருட்கள் சேரும். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிடாதீர்கள். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.
சிம்மம்

வெகுநாட்களாகப் பார்க்க நினைத்த நண்பர்களைச் சந்தித்து பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். உடன்பிறந்தவர்களிடம் சில விஷயங்களில் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். நன்மை கிட்டும் நாள்.
கன்னி

முக்கிய முடிவுகளைத் தைரியமாக எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீட்டை அழகுப் படுத்துவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். அமோகமான நாள்.
துலாம்

பிள்ளைகளை இசை, நடனம் போன்றவற்றில் பயிற்சி பெறச் செய்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். நவீன ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீ்ரகள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். புது தொழில் தொடங்குவீர்கள். புதுமை படைக்கும் நாள்.
விருச்சிகம்

அடகு வைத்திருந்த நகைகளை மீட்பீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். எடுத்த வேலைகளை எப்பாடுபட்டாவது முடித்துக் காட்டுவீர்கள். தாய்வழி உறவினர் களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும் பழைய கடனை தீர்க்க புது வழி பிறக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
தனுசு

அழகு, இளமை கூடி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். மனஉளைச்சல் அகலும். அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். வெளிவட்டாரத்தில் புகழப்படுவீர்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.
மகரம்

வாக்கு சாதுர்யத்தால் வாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிறர் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்துவீர்கள். வருங்காலத்துக்கான ஏற்பாடுகளை செய்து முடிப்பீர்கள். இங்கிதமாக பேசி எல்லோரையும் கவர்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப் பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.
கும்பம்

உங்களைப் பற்றிய தவறான வதந்திகள் பரவக்கூடும். வாகனத்தில், சாலையில் செல்லும்போது கவனம் தேவை. விலை உயர்ந்தப் பொருட்களை வாங்குவதால் சேமிப்பு கரையும். ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக் கும். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. நாவடக்கம் தேவைப்படும் நாள்.
மீனம்

குலதெய்வக் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். வேற்று மதத்தவரால் நன்மை பிறக்கும். அவ்வப்போது மனக்குழப்பங்கள் வந்துபோகும். வாகனம் செலவு வைக்கும். கணவன்- மனைவிக்குள் மனம் விட்டு பேசுவது நல்லது. உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்துப் போகும். அலைச்சலுடன் ஆதாயம் தரும்நாள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்