உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் நிகழும் அதிசயம்

(தனுஜன் ஜெயராஜ் )

உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு பின்னர் அதிசய நிகழ்வு நடைபெறவுள்ளது.

21வது பிபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகின்றன.

இதில் நடப்பு சாம்பியன் ஜேர்மனி, முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகள் வெளியேறி உள்ளன.

இதுவரை நடந்த போட்டிகளில் 12 அணிகள் மட்டுமே மாறி மாறி இறுதிப் போட்டிகளில் விளையாடி உள்ளன, 8 அணிகள் மட்டுமே சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளது.

தற்போது நாக் அவுட்டில் உள்ள பெல்ஜியம், ரஷ்யா, ஜப்பான், மெக்சிகோ, கொலம்பியா, சுவிட்சர்லாந்து, குரேஷியா ஆகியவை இதுவரை இறுதிப்போட்டியில் நுழைந்ததில்லை, முதல்முறையாக இந்த அணிகளுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதேபோன்று கடந்த 50 ஆண்டுகளில் இங்கிலாந்து, சுவீடன், உருகுவே இறுதிப்போட்டியில் விளையாடவில்லை, இதில் ஏதேனும் ஒரு அணி விளையாடலாம்.

இதுதவிர ஸ்பெயின், ஜேர்மனி வெளியேறிவிட்டதால், எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்றாலும் அந்த அணி வீரர்களுக்கு முதல் கோப்பையாக அது இருக்கும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்