காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இதை குடித்திடுங்க

நாம் உயிர்வாழ மிகவும் இன்றியமையாதது தண்ணீர், காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்த வேண்டும் என பலரும் சொல்ல கேள்விப்பட்டிருப்போம், மருத்துவர்களும் இதையே பரிந்துரைப்பார்கள்.

அதிலும் குறிப்பாக சுடுதண்ணீர் அருந்தினால் ஏராளமான நன்மைகளை பெறலாம்.
வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நிலையில் சுடுநீரை குடித்து வந்தால், குடல் இயக்கத்தை சீராக்கி, மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கிறது, அத்துடன் கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடையைக் குறைக்கிறது.

சுடுதண்ணீர் சளியை முறித்து சுவாச பிரச்சனைகளில் இருந்து விடுதலை தரும், சுவாச பாதையை சுத்தமாகவும் வைத்துக் கொள்கிறது.
சீரற்ற ரத்த ஓட்டத்தினால் பல்வேறு உடல் நலக் குறைவுகள் ஏற்படுகிறது, சுடுதண்ணீர் ரத்த ஓட்டத்தை சீராக்குவதால் தினமும் பருகுவது நல்லது.
மாதவிடாய் காலங்களில் பெண்கள் தாங்க முடியாத வயிற்று வலியினால் அவதிப்படுகிறார்கள். அந்த நேரங்களில் சூடான நீரை அடிக்கடி குடித்து வந்தால், மாதவிடாயினால் ஏற்படும் வயிற்று வலி விரைவில் குறைவதைக் காணலாம்.
வெந்நீருடன் சிறிது எலுமிச்சைச் சாற்றைக் கலந்துக் குடித்து வந்தால், நமது உடலின் வெப்பநிலை உயர்ந்து, வியர்வையாக வெளியேறுகிறது. இதனால் நமது உடம்பில் உள்ள நச்சுத் தன்மைகள் நிறைந்த கிருமிகள் வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாக்கப்படுகிறது.
பெண்கள் மற்றும் ஆண்களின் அழகை கெடுக்கும் வகையில் உள்ள பருக்களை உருவாக்காமல் தடுப்பதுடன் விரைவில் முதுமை தோற்றம் ஏற்படாமல் இருக்கும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்