மருத்துவத்துறையில் புதிய சரித்திரம் படைக்கும் முயற்சியில் மைக்ரோசொப்ட்

மைக்ரோசொப்ட் நிறுவனமானது ஏற்கனவே மருத்துவத் துறை சார்ந்த சில தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளது.

எனினும் இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட மற்றுமொரு தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்யும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.

அதாவது கிளவுட் கம்யூட்டிங்கை அடிப்படையாகக் கொண்டு இத் தொழில்நுட்பம் உருவாக்கப்படவுள்ளது.

மனிதர்களில் உள்ள குறைபாடுகளை இனங்கண்டு அவற்றினை கிளவுட் கணினிக்கு அனுப்பி வைப்பதுடன் வைத்தியர்களும் அக் கிளவுட் கணினியை நாடி நோயாளிகளுக்கு தேவையான மருத்து ஆலோசனைகளை வழங்கக்கூடிய வகையில் இது உருவாக்கப்படவுள்ளது.

இதற்காக தனது மருத்துவக் குழுவையும் இணைத்து மைக்ரோசொப்ட் நிறுவனம் செயற்பட்டு வருகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்