கொழும்பில் சொகுசு வாழ்க்கையில் பிள்ளைகள்! வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட தாய்

வேயங்கொட பகுதியில் வாய்க்கால் ஒன்றில் உயிரிழந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வதுரவ பிரதேசத்தை சேர்ந்த 85 வயதான கருணாவத்தி என்ற தாயொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் உடலில் சிறிய காயங்கள் காணப்பட்டமையினால் இதுவொரு கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எனினும் பிரேத பரிசோதனையில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இரவு சுகயீனமடைந்த பெண் அயலவர்களை அழைப்பதற்காக வெளியே சென்ற போது வாய்க்காலுக்குள் விழுந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

கடந்த 15 வருடங்களாக அயலவர்களின் உதவியுடன் குறித்த பெண் அந்தப் பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார்.

அவரது பிள்ளைகள் கொழும்பில் நல்ல நிலையில் வாழ்ந்த போதும், கடந்த 15 வருடங்களாக தாயை பார்க்க எந்வொரு பிள்ளையும் வரவில்லை.

அயலவர்களே உயிரிழந்த பெண்ணுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பூர்த்தி செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்