விஜயகலாவுக்கு எந்த தகுதியும் இல்லை! கொதித்தெழுந்த பெண்கள்

வடக்கில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் நிம்மதியாக வாழ விடுதலைப்புலிகள் மீண்டும் எழுச்சி பெற வேண்டும் எனக் கூறிய இராஜாங்க அமைச்சரை பதவியிலிருந்து நீக்கி, கைது செய்யப்பட வேண்டும் என நீதிக்கான பெண்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

நீதிக்கான பெண்கள் அமைப்பினால் கொழும்பில் நேற்று ஒழுங்கு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் உரையாற்றிய நீதிக்கான பெண்கள் அமைப்பின் தலைவி சர்மிளா கோணாவல,

தடைசெய்யப்பட்ட அமைப்பை மீண்டும் உருவாக்க நினைப்பது இந்த நாட்டு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

அரச அதிகாரிகளால் இத்தகைய சர்ச்சைக்குரிய அறிக்கைகள் வெளியிடப்படும் போது நாங்கள் அமைதியாக இருக்க முடியாது என ஆத்திரத்துடன் தெரிவித்துள்ளார்.

போரின் போது நாம் எதிர்நோக்கிய மோசமான விளைவுகளை விஜயகலா மறந்திருக்க கூடும். ஆனால் அவ்வாறான சகாப்தத்தை நாம் மீண்டும் ஒருபோதும் விரும்ப மாட்டோம், என கூறியுள்ளார்.

மேலும், நீதிக்கான பெண்கள் அமைப்பின் செயலாளர் சாவித்ரி குணசேகர கருத்து தெரிவிக்கையில்,

இராஜாங்க அமைச்சர் பதவி வகிக்க விஜயகலா தகுதியற்றவர் என குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் மீண்டும் வரும்பொழுது வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பிள்ளைகள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதே அவருடைய கருத்து.

ஆனால் யுத்தத்தின் போது கல்வியை இழந்து சயனைட் குப்பிகளுடன் வடக்கு கிழக்கு சிறுவர்கள் வாழ்ந்ததை அவர் மறந்து விட்டார் என குற்றம் சுமத்தியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்