உன் மீது துர்நாற்றம் அடிக்கிறது: லண்டனில் ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு நேர்ந்த இனவெறி தாக்குதல்
லண்டனில் ஓடும் பேருந்தில் வைத்து கறுப்பின பெண்மணி மீது வெள்ளையின நபர் இனவெறி தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகியுள்ளது.
London’s Blackwall இல் இருந்து Trafalgar Square நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்தில் கறுப்பின பெண்மணி அமர்ந்து பயணித்துள்ளார்.
அப்போது, அதே பேருந்தில் இருந்த வெள்ளையின நபர்,கறுப்பின பெண்ணை பார்த்து, நீ எந்த பேந்தில் ஏறியிருக்கிறாய் தெரியுமா? இது உனக்கான பேருந்து கிடையாது.
மேலும், உன் மீது துர்நாற்றம் அடிக்கிறது என இனவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். ஆனால் இதனை அப்பெண் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். இருப்பினும் இந்த நபர் தொடர்ந்து அந்த பெண்ணை வசைபாடிக்கொண்டே இருந்துள்ளார்.
இதனைப்பார்த்த மற்றொரு பெண்மணி, உங்களுக்கு ஏதேனும் அந்த பெணணுடன் பிரச்சனையா என கேட்டதையடுத்து, அந்த நபர் அமைதியாக இருந்துள்ளார். இந்த சம்பவத்தை பேருந்தில் இருந்த மற்றொரு நபர் வீடியோ எடுத்துள்ளார்.
ஆனால், இதுகுறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட்டதா என்பது குறித்து தெரியவரவில்லை.
கருத்துக்களேதுமில்லை