ஆசிரியையின் தலையை துண்டித்த நபர்.. தலையுடன் 5கிமீ தூரம் ஓடியதால் பரபரப்பு!

ஜார்கண்ட் மாநிலத்தில் மர்ம நபர் ஒருவர் ஆசிரியையின் தலையை துண்டித்துவிட்டு, தலையை மட்டும் எடுத்துக்கொண்டு 5கிமீ தூரம் ஓடியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் ம்,மாநிலம், செராய்கெலா மாவட்டத்தில் இயங்கி வரும் Khaprasai துவக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் சுக்ரா ஹெசா (30). நேற்று மதிய இடைவேளையின் போது, உணவு வழங்கப்பட்டுக்கொண்டிருந்த இடத்தை நோக்கி வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென ஆசிரியை தரதரவென இழுத்து சென்றுள்ளார்.

தனது வீடு வரை இழுத்துச்சென்ற அந்த மர்ம நபர் வீட்டிலிருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு, ஆசிரியையின் தலையை மட்டும் தனியாக துண்டித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவர் மீது கல் வீசி தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.

உடனே அந்த நபர் சுக்ராவின் துண்டிக்கப்பட்ட தலையை மட்டும் எடுத்துக்கொண்டு, Hesel கிராமம் அருகே உள்ள வனப்பகுதிக்குள் 5 கிமீ தூரம் வரை ஓடியுள்ளார்.

இதனால் பதறிப்போன பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனடிப்படையில் சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர், மர்ம நபரை பிடித்த விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர். அதில் அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், அவரது பெயர் ஹரி ஹெம்ப்ராம்(26) என்பதும் தெரியவந்தது.

இதற்கிடையில் பொலிஸாரின் பிடியில் இருந்த ஹரி மீது, பொதுமக்கள் சிலர் பலமாக தாக்குதல் நடத்தியதால், படுகாயமடைந்த ஹரி தற்போது ஜாம்செட்பூரிலுள்ள சடார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆசிரியையின் தலையை மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் துண்டித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியினை கிளப்பியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்