இரத்ததானம்

திருகோணமலை கப்பல்துறை ஆயுள்வேத தள வைத்தியசாலையின் 14 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று (04) இரத்தமான முகாம் இடம்பெற்றது.

இந்த இரத்ததான முகாமின் ஆரம்ப நிகழ்வில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் ஆணையாளர் திருமதி டாக்டர்.ஸ்ரீதர், வைத்தியசாலை அத்தியட்சகர் திருமதி டாக்டர்.டி.தவச்செல்வன், மதகுருமார் மற்றும் வைத்தியர்கள் குருதிக்கொடையாளர்கள் இராணுவ வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ் வைத்தியசாலை அரம்பிக்கப்பட்ட 14 வது ஆண்டில் இவ்வாறான இரத்ததான முகாம் 05 முறை இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்