ஐம்மு – காஷ்மீரில் நிலநடுக்கம்-ஐவர் உயிரிழப்பு

ஐம்மு – காஷ்மீர் மாநிலம் பால்டால் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, ஒரு பெண் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

பால்டால் பகுதியில் உள்ள பிராரிமார்க் என்ற இடத்தில், நேற்று (செவ்வாய்க்கிழமை) திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி ஒரு பெண் மற்றும் 4 ஆண்கள் உள்ளிட்ட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

காஷ்மீர் பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்துவரும் நிலையில், அடிக்கடி நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களும் இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதையடுத்து, தகவலறிந்து அங்கு வந்த மீட்புப்படையினர் நிலச்சரிவில் சிக்கிய உடல்களை மீட்டனர்.

மேலும் காயம் அடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்