ஆரம்பமாகியது அரசியல் பிரவேசம்! ஒரே மேடையில் மஹிந்த, பஸில் மற்றும் கோத்தா

பத்தரமுல்ல – நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் கட்சி தலைமையகத்திற்கு கோத்தபாய ராஜபக்ஸ இன்று முதன்முறையாக சென்றுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ஸவின் இந்த பயணத்தில் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் பஸில் ராஜபக்ஸவும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது மஹிந்த, கோத்தா மற்றும் பஸிலுக்கு தாமரை மொட்டுக்கள் வழங்கி ஏனைய உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர்.

தொடர்ந்து மூவரும் ஒரே மேடையில் கடவுள் வணக்கத்துடன் தமது அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினர்கள் சிலர், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ள உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதில் டளஸ் அலகப்பெரும, கெஹலிய ரம்புக்வெல்ல, சமல் ராஜபக்ஸ உள்ளிட்ட பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களும், பொது மக்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்