கனடா வாழ் இலங்கை இளைஞனின் ஈழப்பிரச்சினை தொடர்பான திரைப்படத்திற்கு சர்வதேச விருது

கனடாவில் வசித்து வரும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட ரஞ்சித் ஜோசப் என்ற இளைஞரின் ஈழப்பிரச்சினை தொடர்பான திரைப்படத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

“சினம்கொள்” என்ற குறித்த திரைப்படத்திற்கு சிறந்த அறிமுகத் திரைப்படத்திற்கான கல்கத்தா சர்வதேச திரைப்பட விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கான வசனம் மற்றும் பாடல்களை ஈழத்துக் கவிஞர் தீபச்செல்வன் எழுதியுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர். என்.ஆர். ரகுநந்தன் இசை அமைக்க அரவிந்த் மற்றும் நர்வினி டெரி நடித்துள்ளார்கள்.

2009இற்குப் பின்னரான சூழலில் முன்னாள் போராளி ஒருவரின் வாழ்க்கை பற்றியதாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்