காரைநகருக்கான ரெலிகொம் தூண்கள் முறிந்து விழும் அபாய நிலையில்

காரைநகர்” பொன்னலை தொடக்கம் வலந்தலை வரை, ஸ்ரீலங்கா டெலிகொம் கடலுக்குள் தூண்களை நிறுவி காரைநகருக்கு தொலைபேசி சேவையை வழங்கி வருகிறது, கடலுக்குள் நிறுவிய ஸ்ரீலங்கா ரெலிகொம் தூண்கள் பல கீழ் பகுதியில் வெடிப்புகள் ஏற்பட்டள்ளது.

தூண்களுக்கு உள்ளே இருக்கும் கம்பிகள் கடல் நீர் ஊறி துருப்பிடித்து தூண்கள் வெடிப்புடன் காணப்படுகின்றன. வீதிக்கு மிக அருகில் காணப்படும் தூண்கள் பலத்த காற்று வீசினால் முறிந்து விழும் அபாயநிலையில் உள்ளன. இதனால் வீதியில் செல்லும் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன.

இது தொடர்பாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண ஸ்ரீலங்கா ரெலிகொம் முகாமையாளர் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்