முன்பள்ளிச்சிறார்களின் மெய்வன்மைப்போட்டி

உரும்பிராய் வடக்கு கணேசா சனசமூக நிலைய முன்பள்ளிச்சிறார்களின் மெய்வன்மைப்போட்டி இன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 1.30 மணியளவில் நிலையத்தலைவர் செ.கு.சண்முகநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களாக வலி.கிழக்கு (கோப்பாய்) பிரதேசசபை உறுப்பினர் சி.அகீபன், ச.மகாலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் சிறார்களின் மெய்வன்மை நிகழ்ச்சிகள், கலைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றதுடன், வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களும் விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் வலி.கிழக்கு (கோப்பாய்) பிரதேசசபை உறுப்பினர் சி.அகீபனின் கோரிக்கையின் பேரில் , வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அவர்களின் 2018ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டிலிருந்து ரூ. 100,000/= பெறுமதியான வீதி விளக்குகளும் கணேசா சனசமூக நிலையத்தாரிடம் கையளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

நிகழ்வுகளில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி.கிழக்கு (கோப்பாய்) பிரதேசசபை உறுப்பினர் சி.அகீபன், சனசமூக நிலைய நிர்வாகிகள், உறுப்பினர்கள், முன்பள்ளிச்சிறார்கள், ஆசிரியர்கள், ஊரவர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்