மட்டக்களப்பு மாவட்டத்தில் 3400 இயற்கை கழிவறைகளை அமைக்க அனுமதி

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் 3400 இயற்கை கழிவறை வசதிகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்காக 300 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் இணங்கியுள்ளது.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இப்பிரதேசத்தில் சுகாதார பிரச்சினை மற்றும் வறுமை நிலை என்பவற்றை குறைப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வகுக்கப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொள்வதற்காக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சரும் கிராமிய பொருளாதாரம் தொடர்பான அமைச்சருமான விஜித் விஜயமுனி சொய்சா சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்