மோதல் என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி-மகிந்த

ராஜபக்சாக்களுக்கிடையில் உள்வீட்டு மோதல் காணப்படுவதாகவும், அவர்களுக்கிடையில் உள்ள பிரச்சினை கூட்டு எதிரணியின் அரசியல் எதிர்காலத்தைப் பாதிக்கும் எனவும் அரசாங்க தரப்பு அமைச்சர்களினால் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கு நாம் முற்றுப் புள்ளி வைத்துள்ளோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு காரியலயத்துக்கு நேற்று கோத்தாபய ராஜபக்ஷ வருகை தந்திருந்தார். இது குறித்து மஹிந்த ராஜபக்ஷ சிலாகித்து கூறுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

மஹிந்த ராஜபக்ஷாவின் அரசியல் எதிர்காலம் அவர் ஓய்வு பெறும் வரையில் தான். அவர் விரைவில் ஓய்வு பெறுவார். அதன் பின்னர் ராஜபக்ஷாக்கள் பிரச்சினைப்பட்டுக் கொள்வர். பொதுஜன பெரமுனவின் எதிர்காலம் அவ்வளவுதான் என அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான மஹிந்த சமரசிங்க நேற்று முன்தினம் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்