திருகோணமலையில் கடை உடைத்து திருடிய சந்தேக நபர்கள் இருவர் கைது

திருகோணமலை உப்புவெளி பகுதியில் சில்லறை கடையொன்றை உடைத்து திருடிய இருவரை நேற்றிரவு (4) கைது செய்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்..

திருகோணமலை,சுமேதகம மற்றும் பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 21,மற்றும் 24 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹெரோயின், கஞ்சா மற்றும் சுருட்டு போன்ற போதைப் பாவனைகளுக்கு அடிமையானவர்கள் இவர்களென ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சில்லறை கடையினை உடைத்து பொருட்கள் மற்றும் மீள் நிரப்பு அட்டைகளையும் திருடியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ள தோடு,திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்